முட்டை

"முட்டை" என்பதன் தமிழ் விளக்கம்

முட்டை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Muṭṭai/

(பெயர்ச்சொல்) முட்டை பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும்
கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்றுப் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன
முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும்
பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும்
கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன

(பெயர்ச்சொல்) egg

வேற்றுமையுருபு ஏற்றல்

முட்டை + ஐமுட்டையை
முட்டை + ஆல்முட்டையால்
முட்டை + ஓடுமுட்டையோடு
முட்டை + உடன்முட்டையுடன்
முட்டை + குமுட்டைக்கு
முட்டை + இல்முட்டையில்
முட்டை + இருந்துமுட்டையிலிருந்து
முட்டை + அதுமுட்டையது
முட்டை + உடையமுட்டையுடைய
முட்டை + இடம்முட்டையிடம்
முட்டை + (இடம் + இருந்து)முட்டையிடமிருந்து

முட்டை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.