புள்ளோப்புதல்

"புள்ளோப்புதல்" என்பதன் தமிழ் விளக்கம்

புள்ளோப்புதல்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Puḷḷōpputal/

(வினைச்சொல்) சங்க காலத்தில் பெண்களின் பணிகளில் புள்ளோப்புதல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. புள்ளோப்புதல் என்றால் பறவைகளை விரட்டுதல் ஆகும்.
(புள்ளினம்- பறவையினம்) . இதனை சங்ககால மகளிர் விளையாட்டாகவும் கொண்டிருந்தனர். தானியங்களை உண்ண வரும் கோழி உள்ளிட்ட புள்ளினங்களை, குளிர்,தழல்,தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு விரட்டினர். இந்தக் கருவிகளுக்குக் கிளிகடி கருவிகள் என்பது பெயராகும். இவ்வாறு புள்ளினங்களை விரட்டும் போது ஆலோ என்று சொல்லி விரட்டுவது மரபாகும்

மெய் உயிர் இயைவு

ப்+உ=பு
ள்=ள்
ள்+ஓ=ளோ
ப்=ப்
ப்+உ=பு
த்+அ=
ல்=ல்

புள்ளோப்புதல் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.