நெட்டிலிங்க மரம்

"நெட்டிலிங்க மரம்" என்பதன் தமிழ் விளக்கம்

நெட்டிலிங்க மரம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Neṭṭiliṅka maram/

(பெயர்ச்சொல்) சில சமயங்களில் அசோக மரம் என அழைக்கப்படுகிறது. எனினும் சராக்கா இந்திகா (saraca indica) என்னும் மரமே பழைய நூல்களில் அசோகா என அழைக்கப்படுவதால், இம் மரம், போலி அசோகா என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. இது சுமார் 15 மீட்டர் (50 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. நீண்டு மெலிந்த கூம்பு வடிவில் வளரும் இது, கிளைகளைப் பரப்பி வளர்வதில்லை. மெலிந்து, கிடை மட்டத்துக்குக் கீழ் சுமார் 45 பாகை அளவில் கீழ் நோக்கிய நிலையில் வளரும் இதன் கிளைகள் சுமார் ஒரு மீட்டர் நீளம் வரையே வளர்கின்றன. ஒடுங்கி நீளமாகவும், இருபுறமும் பளபளப்பாகவும் இருக்கும் இதன் இலைகள் தடிப்பானவை, விளிம்புகளில் அலையலையாக நெளிந்து காணப்படும். இலையின் வடிவமும், இவை தொங்கிய நிலையில் காணப்படுவதும், இம்மரத்தின் மூல இடம் அதிக மழைவீழ்ச்சி கொண்ட இடமாக இருக்கக்கூடும் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. [1]
நெட்டிலிங்க மரம், இந்தியாவின் தென்பகுதிகளையும் இலங்கையையும் தாயகமாகக் கொண்டது. பாரம் குறைந்த இந்த மரம் மேள வாத்தியங்கள் செய்வதற்கும் பயன்படுகின்றது.
இம்மரத்தின் பூக்களோ, பழங்களோ கவர்ச்சியானவை அல்ல. இலைகளின் அழகுக்காகவே இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன. மதிலோரமாகவும், பாதைகளின் இருமருங்கும் வரிசையாக நட்டு வளர்ப்பதற்குப் பொருத்தமானது

வேற்றுமையுருபு ஏற்றல்

நெட்டிலிங்க மரம் + ஐநெட்டிலிங்க மரத்தை
நெட்டிலிங்க மரம் + ஆல்நெட்டிலிங்க மரத்தால்
நெட்டிலிங்க மரம் + ஓடுநெட்டிலிங்க மரத்தோடு
நெட்டிலிங்க மரம் + உடன்நெட்டிலிங்க மரத்துடன்
நெட்டிலிங்க மரம் + குநெட்டிலிங்க மரத்துக்கு
நெட்டிலிங்க மரம் + இல்நெட்டிலிங்க மரத்தில்
நெட்டிலிங்க மரம் + இருந்துநெட்டிலிங்க மரத்திலிருந்து
நெட்டிலிங்க மரம் + அதுநெட்டிலிங்க மரத்தது
நெட்டிலிங்க மரம் + உடையநெட்டிலிங்க மரத்துடைய
நெட்டிலிங்க மரம் + இடம்நெட்டிலிங்க மரத்திடம்
நெட்டிலிங்க மரம் + (இடம் + இருந்து)நெட்டிலிங்க மரத்திடமிருந்து

மெய் உயிர் இயைவு

ந்+எ=நெ
ட்=ட்
ட்+இ=டி
ல்+இ=லி
ங்=ங்
க்+அ=
=
ம்+அ=
ர்+அ=
ம்=ம்

நெட்டிலிங்க மரம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.