திருக்கோணமலை

"திருக்கோணமலை" என்பதன் தமிழ் விளக்கம்

திருக்கோணமலை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Tirukkōṇamalai/

(பெயர்ச்சொல்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ் பெற்ற இயற்கைத் துறைமுக நகரம். தமிழர் தாயகத்தின் தலை நகரம் எனக் கொண்டாடப் படுவதனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நக‌ராகவும் உள்ளது. புகழ்பெற்ற கோணேசர் ஆலயமும் கன்னியா வெ ந் நீரூற்றும் இதன் மேலதிகச் சிறப்புகள். குண (கிழக்கு) திசையில் அமைந்த மலைகளோடு கூடிய நகர் என்ற பொருளில் திரு(சிறப்புடைய) +குணமலை என்பது திருக்கோணமலை ஆகியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.மூன்று கோணங்களில் அமைந்த மலை என்ற கருத்தில் திரிகோணமலை எனவும் அழைப்பர்.திருமலை என்ற சொல்லும் தற்போது வழக்கத்தில் உண்டு.

(பெயர்ச்சொல்) Trincomalee

வேற்றுமையுருபு ஏற்றல்

திருக்கோணமலை + ஐதிருக்கோணமலையை
திருக்கோணமலை + ஆல்திருக்கோணமலையால்
திருக்கோணமலை + ஓடுதிருக்கோணமலையோடு
திருக்கோணமலை + உடன்திருக்கோணமலையுடன்
திருக்கோணமலை + குதிருக்கோணமலைக்கு
திருக்கோணமலை + இல்திருக்கோணமலையில்
திருக்கோணமலை + இருந்துதிருக்கோணமலையிலிருந்து
திருக்கோணமலை + அதுதிருக்கோணமலையது
திருக்கோணமலை + உடையதிருக்கோணமலையுடைய
திருக்கோணமலை + இடம்திருக்கோணமலையிடம்
திருக்கோணமலை + (இடம் + இருந்து)திருக்கோணமலையிடமிருந்து

மெய் உயிர் இயைவு

த்+இ=தி
ர்+உ=ரு
க்=க்
க்+ஓ=கோ
ண்+அ=
ம்+அ=
ல்+ஐ=லை

திருக்கோணமலை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.