உறுதி

"உறுதி" என்பதன் தமிழ் விளக்கம்

உறுதி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Uṟuti/

(பெயர்ச்சொல்) திடம்
வல்லமை. இருவருந்த முறுதியினின்றாரென்னில் (சி. சி. 1, 35)
நிச்சயம்
அறம், பொருள், இன்பம், வீடு
புருஷார்த்தம். மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா நெடுக்கப்பட்ட பொருள் (குறள், உரைப்பாயிரம்).
திடவாக்கு. ஆண்டவன்புகலுறுதியு மாண்மையுங் கேட்டு (பாரத. புட்ப. 47)
செய்யத்தக்கது. வீடுதலுறுதியென்றே விளம்பி (கந்தபு. சூர. வதை. 64)
நன்மை. புத்தேளாவதே யுறுதி யென்றான். (சீவக. 1235).
மந்திரம். பொய்கையு குட்படவுரைத்தனனுறுதிநோக்கினான் (சீவக. 1216)
ஆதாரம். உலகுக்கோ ருறுதி தன்னை (தேவா. 481, 5)
நல்லுபதேசம்
இலாபம். கேட்டினுமுண்டோ ருறுதி (குறள், 796)
கல்வி. (திவா.)
ஆட்சிப்பத்திரம்
விடாப்பிடி

(பெயர்ச்சொல்) Firmness, strength, stability
Power, energy, force
Certainty, assurance
Aims of mankind, objects of human pursuit, four in number, viz.
Positive declaration
Appropriate thing to do, suitable action
Good, benefit
Mantiram, as that which is efficacious
Support, prop
Moral or religious advice
Profit, benefit
Learning
Bond, title deed, voucher
Stubbornness, pertinacity

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » உறுதி வேண்டும்
  • வேற்றுமையுருபு ஏற்றல்

    உறுதி + ஐஉறுதியை
    உறுதி + ஆல்உறுதியால்
    உறுதி + ஓடுஉறுதியோடு
    உறுதி + உடன்உறுதியுடன்
    உறுதி + குஉறுதிக்கு
    உறுதி + இல்உறுதியில்
    உறுதி + இருந்துஉறுதியிலிருந்து
    உறுதி + அதுஉறுதியது
    உறுதி + உடையஉறுதியுடைய
    உறுதி + இடம்உறுதியிடம்
    உறுதி + (இடம் + இருந்து)உறுதியிடமிருந்து

    உறுதி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.