ஆரம்

"ஆரம்" என்பதன் தமிழ் விளக்கம்

ஆரம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /āram/

(பெயர்ச்சொல்) மாலை
(கிளி,புறா முதலிய சில பறவைகளின் கழுத்தில் காணப்படும்) வளையம் போன்ற கோடு
வண்டிச்சக்கரத்தை குடத்தை வட்டாவோடு இணைக்கும் பகுதி
வட்டத்தின் மையப் பகுதிக்கும் பரிதிக்கும் இடைப்பட்ட தூரம்
ஒரு வட்டத்தின் மையப்பள்ளியில், வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி மற்றும் அதனளவு ஆரம் எனப்படும்
மார்பில் அணியும் ஆபரணம்

(பெயர்ச்சொல்) garland
ring(round the neck of some birds such as parakeet,doves, etc)
spoke of a cart wheel
radius

வேற்றுமையுருபு ஏற்றல்

ஆரம் + ஐஆரத்தை
ஆரம் + ஆல்ஆரத்தால்
ஆரம் + ஓடுஆரத்தோடு
ஆரம் + உடன்ஆரத்துடன்
ஆரம் + குஆரத்துக்கு
ஆரம் + இல்ஆரத்தில்
ஆரம் + இருந்துஆரத்திலிருந்து
ஆரம் + அதுஆரத்தது
ஆரம் + உடையஆரத்துடைய
ஆரம் + இடம்ஆரத்திடம்
ஆரம் + (இடம் + இருந்து)ஆரத்திடமிருந்து

ஆரம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.