அறுதி

"அறுதி" என்பதன் தமிழ் விளக்கம்

அறுதி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aṟuti/

(மாற்றமுடியாத)முடிவு, இறுதி
(நிலம்,வீடு போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்டுவிடுவதாகக் கூறி வைக்கும் அடமானம்
முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46).
அறுதிக்கிரயம்.அறுதியீ தென்றுகொண்டு (திருவாலவா. 46, 32).
அறுதிக்குத்தகை
நாசம். அறுதியிலரனே (சி. சி. 1, 35, சிவாக்.)
இல்லாமை
வரையறை. காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ (பாரத. உலூக. 16).
உரிமை. செம்மகள் கரியோற் கறுதி யாக (கல்லா. 17).
வரை. அன்றுமுத லின்றறுதியா (திவ். பெரியாழ். 4, 10, 9)

final
mortgage for a specific period
End, close, termination
Finality, as in a sale.
Being unconditioned, as a lease
Destruction
Non-existence
Limit
Possession, ownership, right
Until

அறுதி

ஆதனத்தை எழுதிக் கொடுத்துக் கடன் பெறும் ஒரு முறை

அறுதி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.