அசை

"அசை" என்பதன் தமிழ் விளக்கம்

அசை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Acai/

(வினைச்சொல்) (மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் மென்மையாக)ஆடுதல்,(யாப்பில்)எழுத்தை அடிப்படயாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு
வினைச் சொல்லாக வரும்போது அசைதல், நகர்தல் அல்லது விலகுதல் என்பதைக் குறிக்கும். பெயர்ச் சொல்லாகுமிடத்து ஒலியின் அல்லது ஓசையின் சிறு பிரிவைக் குறிக்கும். இது தமிழிலக்கணத்தில் முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்படுகிறது. வா ஓரசை உள்ள சொல். அ..வன் இரண்டு அசைகள் உள்ள சொல். ஆ..கட்...டும் மூன்று அசைகள் கொண்ட சொல். பொதுவாக எல்லா மொழிகளிகளிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் எல்லாம் ஓரசை, ஈரசை சிலவேளைகளில் மூவசைச் சொற்களாகவே அமையும்.

(வினைச்சொல்) sway
stir
move
shake
metrical syllable

அசை

சுருட்டிய பாய்
விறகு முதலியவற்றை வைக்கவென சிறிய இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் ஊஞ்சல் போல வளைத்துக் கட்டப்பட்டதொரு அமைப்பு

தமிழ் களஞ்சியம்

  • இலக்கணம் » யாப்பு » அசை
  • சாண்டில்யன் » கடல்புறா » அசைந்த திரை! அஞ்சன விழிகள்!
  • அசை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.