வ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வெள்ளைக்காரன் | இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவன். |
வெள்ளைக்காரி | வெள்ளைக்காரன் என்பதன் பெண் பால். |
வெள்ளையடி | சுண்ணாம்புப் பூசு. |
வெள்ளையணு | இரத்தத்தில் உள்ள வெள்ளை நிற உயிரணு. |
வெள்ளையன் | ஆங்கிலேயன். |
வெள்ளை வெளேர் என்று | வெண்மையாக. |
வெள்ளோட்டம் | சோதனை ஓட்டம். |
வீட்டுக்கு அனுப்பு | வேலையை விட்டு நீக்கு. |
வீட்டுப் பாடம் | மாணவர் வீட்டில் செய்யும் பாடம். |
வீதி நாடகம் | தெருக்களில் நடத்தும் நாடகம். |
வீராவேசம் | வீரம் காட்டும் வெறி. |
வீராப்பு | வாய்ப்பேச்சு. |
விகட கவி | சிரிக்கப் பேசுவோன். |
விசிப் பலகை | ஊஞ்சல் பலகை. |
விசிறி மடிப்பு | மேலாடையில் விசிறி போன்று மடித்தல். |
விசுக் கென்று | உடனடியாக. |
விசும்பல் | விம்மியழுதல். |
விடலைத் தேங்காய் | சிதறு தேங்காய். |
விடாக் கண்டன் | பிடிவாதக்காரன். |
விடாப்பிடியாக | விட்டுக் கொடுக்காத. |