வ - வரிசை 8 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
வேட்டைப் பல்

கோரைப் பல்.

வேண்டா வெறுப்பாக

விருப்பமில்லாது.

வேண்டு மென்றே

நன்று அறிந்தே.

வேலையைக் காட்டு

குறும்பு செய் : விஷமம் செய்.

வெகுவாக

மிகவும்.

வெடவெடத்தல்

நடுங்குதல்.

வெடுக்கென்று

எதிர்பாராத விதமாக.

வெட்ட வெளிச்சம்

வெளிப்படை.

வெலவெலத்தல்

நடுங்குதல்.

வெளிக்குப் போதல்

மலம் கழித்தல்.

வெளிச்சம் போட்டுக் காட்டு

பகிரங்கப் படுத்து.

வெளிப்பகட்டு

போலி.

வெளியாள்

அயலான்.

வெளி வேஷம்

பொய்யானது: போலி.

வெளுத்துக் கட்டு

வெளுத்து வாங்கு : சிறப்பைக் காட்டு.

வெள்ளக்காடு

நீர்ப் பெருக்கு.

வெள்ளாமை

விவசாயம்.

வெள்ளித் திரை

திரைப்படம்.

வெள்ளெளுத்து

தூரப் பார்வை.

வெள்ளையறிக்கை

விளக்க அறிக்கை.