வ - வரிசை 7 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
விநியோகம் | வழங்கல் |
விகிதம் | விழுக்காடு |
விக்கிரகம் | திருவுருவம் |
விசேட | சிறப்பு |
விமர்சனம் | திறனாய்வு |
விஜயம் | வருகை |
வியாதி | நோய் |
வேகம் | விரைவு |
வித்தியாரம்பம் | ஏடுதொடக்கல் |
வான்மீகநாதர் | பற்றிடங்கொண்டார் |
விசாலாட்சி | தடங்கண்ணி |
விலங்கியல் | விலங்குகளைப் பற்றி அறியும் இயல் விலங்கியல் எனப்படுகிறது. இதில் விலங்குகளின் பரிணாமம், உடற்கூறுகள் போன்றவை ஆராயப்படுகின்றன |
வித்யாலயம் | பள்ளி |
விவாகரத்து | மணமுறிவு |
வரதட்சணை | சீர்வரிசை |
வேழமுகன் | பிள்ளையார் |
வைத்தகண் வாங்காது | கூர்ந்து பார்த்தல். |
வேகத்தடை | வாகனத்தின் வேகம் குறைக்கப்படும் வகையில் சாலையின் குறுக்கே போடும் சிறு திட்டு. |
வேடதாரி | பொய்யன். |
வேட்டு வை | ஒருவன் வாழ்க்கையைக் கெடு. |