வ - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வேண்டிய | இன்றியமையாத |
வேண | See வேண்டிய. |
வினா | அன்றி. தங்களைவினா எனக்கியார் துணை |
வேண்டி | (பொருட்டு). அதை எனக்கு வேண்டிச் செய். |
வச்சிரச்சுவாலை | மின். (யாழ். அக.) |
வியப்ப | ஓர் உவமவாய்பாடு. நேர வியப்ப (தொல் .பொ.291.) |
வேதி | நலிதல். வேதியா நிற்கு மைவரால் (திவ். திருவாய். 7, 1, 3). |
வெளிராதவப்பூ | வெளிராதவன் |
வாசம் | மணம் |
வசந்தம் | தென்றல் |
வசீகரம் | கவர்ச்சி |
வம்சம் | மரபு |
வம்சாவழி | கொடிவழி |
வமிசம் | குடி |
வருத்தம் | துன்பம் |
வர்க்கம் | வகுப்பு, இனம் |
வர்ணனை | புகழ்ந்துரை |
வர்த்தகம் | வாணிப(க)ம் |
வர்த்தகர்கள் | வணிகர்கள் |
வர்த்தகநிலையம் | அங்காடி |