வ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
விஸ்தரி | பரவலாக்கு. |
விஷயம் | விவரம் : பொருள். |
விஷமி | கேடு விளைவிப்பவன். |
விஷமம் | குறும்புச் செயல். |
வில்லங்கம் | சொத்தின் பேரில் கடன், இல்லாதது. |
வியூகம் | படை அணி வகுப்பு. |
வியாபாரம் | வாணிபம் |
வியாபகம் | பரவியிருக்கும் தன்மை. |
வியாசம் | கட்டுரை. |
வியர்த்தம் | பயனற்றது : வீண். |
வித்தியாசம் | வேறுபாடு. |
வித்தாரம் | தந்திரம் : அழகுத்திறன். |
விசுவாசம் | நன்றியுணர்வு |
விசுவாசி | அன்பு செலுத்து. |
விதரணை | விவேகம். |
விசாரி | கேட்டுத் தெரிந்து கொள்: வினவு. |
விக்கினம் | இடையூறு. |
விசாரம் | துன்பம் |
விகடம் | வேடிக்கைப் பேச்சு. |
வீரியம் | சக்தியின் மேன்மையைக் குறித்தல். |