வ - வரிசை 24 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வித்தியா தத்துவம் | காலம் |
விஷ்ணு புராணங்கள் | நாரதீய புராணம் |
வீரப் பறை | முரசு |
வினை | சஞ்சிதம் |
வாயுக்கள் | அபானன் |
வேதாங்கம் | சிட்சை |
வேள்வி | தேவ வேள்வி |
வா | அழைத்தல் |
வீ | பூ |
வௌ | கௌவுதல் |
வல்லுகம் | பெண்கள் தமக்குத் தேவையான சிறு பொருட்களைத் தம்முடனேயே வைத்துக் கொள்ள உதவும் பை. இன்றைய பெண்களின் கைப்பை போன்று அன்றைய பெண்களால் பயன்படுத்தப்பட்ட துணி அல்லது பனையோலையாலான சிறு பை. |
விடிகை | காலை உதயம் |
விந்து | இனப்பெருக்கத்திற்கான ஆணின் உயிரணு |
வனவாசி | காட்டில் வசிக்ககூடியவன் |
வசிய மருந்து | பிறரை கவர்ந்து தன் வசப்படுத்தும் மருந்து |
வதனம் | முகம் |
வரப்பு | எல்லை |
வெண்டாமரை | வெண்ணிறமான தாமரை மலர் |
வன்தட்டு | கணினிகளில் கணினியைப் பயன்படுத்தத் தேவையான இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம் |
வகிடு | வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு |