வ - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வண்ணார் | துணி வெளுத்தல் |
வல்லவன் | ஆய கலைகளில் சிறந்தவன் |
வண்டிப்பாதை | வண்டிகளின் போக்குவரத்துக்காகவென்று ஒதுக்கப்பட்ட சாலையின் பாகம் |
வரவ | வரவு |
வட்டில் | கிண்ணி |
வாய்ப்புணர்ச்சி | வாயினால் புணர்தல் |
விநாயகர் | பிள்ளையார் |
வெட்டி | பயனின்மை |
விடதரி | வெண்குந்திரி |
வெள்ளைப்புலா | மட்புலந்தி |
வேதிப் பொறியியல் | அறிவியல் மற்றும் வேதியியல் சார்ந்தவற்றோடு தொடர்புடைய ஒரு பொறியியல் துறையாகும். பலர் இதை தவறாக வேதியியலுடன் நேரடித்தொடர்புள்ளதாக கருதுவர். எனினும் வேதியியல் கூறுகள் வேதிப்பொறியியலின் ஒரு பகுதியே ஆகும் |
வேளாண்மை | வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டுமிருக வளர்ப்பையும் குறிக்கும். விவசாயம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் மற்றும் தாவரங்களின் உதவியைக் (பயிர்கள்) கொண்டு நாகரீகங்களுக்கு வழிவகுத்திட்ட முக்கியமான வளர்ச்சியாகும். |
வேதியியல் | வேதிப் பொருட்களைப் பற்றிய அறிவியல் துறை |
வடமொழி | வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும் |
வினைச்சொல் | செயலைக் குறிக்கும் சொல் |
வரித்துறை | ஆயப்பகுதி |
வேழம் | யானை |
வளரூக்கி | உடலிலுள்ள உயிரணுக்களை அல்லது கலங்களைப் பாதிக்கக்கூடியதாகப் பிற கலங்களால் வெளிவிடப்படும் வேதிப்பொருட்கள் ஆகும் |
வெள்ளி விழா | 25 ஆண்டுகள் |
வைர விழா | 60 ஆண்டுகள் |