வ - வரிசை 21 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
விளம்பரம்

ஒரு பொருளின் பாவனையை அதிகரிக்க மக்களிடையே தெரிவித்தல் (அ) அடையாலப்படுத்தடல்

விலங்கு

அறிவியல். உயிரினத்தின் ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்தவை.
அறிவியல் அல்லா பொது வழக்கில்: பொதுவாக நிலத்தில் வாழும் உயிரிகள் ஆனால் இவற்றுள் பறவைகளும்,பூச்சிகளும் நுண்ணுயிர்களும் விலங்குகள் என்னும் வகைப்பாட்டில் அடங்காதன.
விலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலாது. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.

வேட்கை

காமவிச்சை

வலியான்

கரிக்குருவிவகை

விசிறிக்குருவி

விசிறிபோன்ற வாலுடைய குருவிவகை

வலாசகம்

குயில்

வலுநிலை

பிழையான

வழாநிலை

சரியான

வீரம்

மனத் தைரியம்
எதையும் வெல்வேன் என்னும் மனவுடல் உறுதி நிலை

வஞ்சப்புகழ்ச்சி

புகழ்த்துவது போல் பேசி இகழ்த்துவது

வினையடை

ஒரு வினையைக் குறித்து மேலும் விளக்கம் அல்லது விரிவு தருமாறு அமையும் சொல். எடுத்த்க்காட்டாக ஓடினான் என்னும் வினைமுற்றை, விரைந்து ஓடினான் என்று என்று கூறினால், அந்த ஓடும் வினையை விரித்து உரைக்கும் சொல் வினையடை. இந்த எடுத்துக்காட்டில் விரைந்து என்னும் சொல் வினையடை

விறிசு

வாணம்
விரிசு
எறிகணை

வையம்

உலகம்

வளர்ச்சி

ஒரு படியிலிருந்து அடுத்த படிக்கு செல்லுதல்
உயர்வு

வாசகம்

வார்த்தை
செய்தி
சொற்றொடர்
செய்யுள்
பிறர் கேட்கச் செபிக்கை
வசனநடை
வாய்பாடு
கடிதம்
தோத்திரம்
திருவாசகம்

வலைப்பூ

சிறு வலைப்பதிவாளர்கள் உருவாக்கும் இணையதளம்

வாரணம்

வாழை
சங்கு
யானை
கடல்
தடை
கவசம்
கோழி
பன்றி
நிவாரணம், விடுதல்

வேதம்

மறை நூல்

வேதம்

இருக்கு
யசூர்
சாமம்
அதர்வணம்

வியாகரணம்

இலக்கணவியல்