வ - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வஞ்சப் புகழ்ச்சி | புகழ்வது போல் இகழ்தல். |
வடிகட்டின | சுத்தமான : முழுமையான. |
வண்ட வாளம் | உண்மை நிலைமை. |
வதவத என்று | அளவிற்கு அதிகமாக. |
வத்தலும் தொத்தலுமாக | மிகவும் மெலிந்த உடலமைப்புடைய. |
வத்திப் பெட்டி | தீப் பெட்டி. |
வத்தி வை | சண்டையை மூட்டு : கோள் சொல். |
வம்சாவளி | கால் வழி : மரபு வழி. |
வம்பள | வீண் பேச்சு. |
வம்புச் சண்டை | வலியச் சென்று போடும் சண்டை. |
வம்பு தும்பு | வீண் சச்சரவு. |
வயசுப் பெண் | பருவமடைந்த இளம் பெண். |
வயதானவர் | 18 வயதிற்கு மேற்பட்டவர். |
வயிற்றலடி | பிழைப்பைக் கெடு. |
வயிற்றுப் பிழைப்பு | உயிர் வாழும் பொருட்டு உழைத்துப் பொருளீட்டுதல். |
வயிற்றெரிச்சல் | பொறாமை : மனக் கொதிப்பு. |
வயிற்றைக் கலக்குகிறது | அச்சத்தால் கவலை மிகுதல். |
வயிற்றைக் கழுவுதல் | அடிப்படைத் தேவை குறித்து உணவு கிடைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல். |
வரலாறு காணாத | புதுமை மிளிர. |
வரவர | நாளடைவில். |