வ - வரிசை 12 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
வாய்ப்பந்தல்

ஆடம்பரப் பேச்சு.

வாரிச் சுருட்டிக் கொண்டு

பதற்றம் மிக்கு.

வாரிக் கொட்டுதல்

மிகுந்த வருவாய் அடைதல்.

வார்த்தை ஜாலம்

அலங்காரப் பேச்சு.

வாலாட்டுதல்

குறும்பு செய்தல்.

வாலைக் குமரி

இளம் பெண்.

வாழா வெட்டி

கணவனைப் பிரிந்து வாழ்பவள்.

வாழையடி வாழையாக

தொடர்ச்சியாக.

வாழ்வாங்கு வாழ்தல்

இனிது விளங்குதல்.

வாளாவிரு

அமைதியாகயிரு.

வாளிப்பு

செழுமை.

வானம் பார்த்த பூமி

மழையை நம்பிப் பயிரிடப் படும் நிலம் : மானாவாரி.

வாஸ்து

மனைக்குரிய தெய்வம்.

வகுப்பு வாதம்

சாதி அல்லது மத அடிப்படை கொண்டு கலவரம் செய்தல்.

வகையறா

தொடர்புடைய ஏனையவை : மரபுடையோர்.

வகையாக

தப்பிக்க முடியாதபடி.

வக்கடை

வயல் வரப்பில் ஒட்டப்படும் ஓடை.

வசமாக

தப்பிக்க முடியாதபடி.

வசன கர்த்தா

நாடக வசனம் எழுதுபவர்.

வசை பாடுதல்

குறை சொல்லுதல்.