வ - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வில்வண்டி | கூண்டு வண்டி. |
விவிலியம் | பைபிள். |
விழுந்தடித்துக் கொண்டு | வேகமாக. |
விழுந்து விழுந்து | அதிக ஈடுபாடு கொள்ளும் தன்மை. |
விளாசுதல் | விரைந்து அடித்தல். |
விறுவிறு என்று | வேகமாக. |
விஷப் பரீட்சை | ஆபத்தான செயல். |
விஸ்வரூபம் | பெருக்கிக் காட்டுதல், ஒன்றைப் பூதாகரமாகச் செய்தல். |
வாட்ட சாட்டம் | நல்ல தோற்றப் பொலிவு. |
வாபஸ் வாங்கு | திரும்பப் பெறு. |
வாயடைத்தல் | அதிர்ச்சியில் மெளனமாதல். |
வாயாடி | அதிகமாகப் பேசுவோர். |
வாயில்லாப் பூச்சி | எதிர்த்துக் கேட்கும் திறனற்றவர். |
வாயும் வயிறுமாக | கர்ப்பமாக இருத்தல். |
வாயைக் கட்டு | உணவில் கட்டுப்பாடுடன் இருத்தல். |
வாயைப் பிள | திகைத்தல். |
வாய்க்கு வந்தபடி | வரன் முறையில்லாது. |
வாய்க் கொழுப்பு | பிறரை மதியாது பேசுதல். |
வாய் கிழிய | பயனற்ற முறையில். |
வாய்த் துடுக்கு | துடுக்காகப் பேசுதல் : மதிப்பில்லாது பேசுதல். |