வ - வரிசை 10 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
விடா முயற்சி

உறுதிப் பாடு.

விடிய விடிய

தொடர்ந்து : இரவு முழுவதும்.

விடிவு காலம்

நல்ல காலம்.

விட்டுக் கொடு

இணங்கிப் போ.

விட்டுச் செல்

இருக்குமாறு செய்து கொடு.

விட்டுத் தள்ளு

ஒதுக்கு.

விட்டுப்பிடி

கடுமையைக் குறைத்து நட.

விட்டொழி

கைவிடு.

விதண்டா வாதம்

பயனற்ற பேச்சு.

விதந்து

பராட்டுரை. வியந்து, மிகவும், சிறப்பித்து

விதிர்விதிர்த்தல்

அதிர்ச்சியடைதல்.

விதூஷகன்

கோமாளி.

வித்தகன்

தேர்ந்தவன்.

விமோசனம்

பரிகாரம்.

வியாகூலம்

கவலை.

வியாஜ்யம்

வழக்கு.

விரகதாபம்

காதல் ஏக்கம்.

விரசம்

ஆபாசம்.

விலாவரியாக

விளக்கமாக.

வில்லுப்பாட்டு

கதைகளை இசை கூட்டும் வகையில் நடத்தும் வகை.