வ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வானரம் | வாலுடைய மற்றும் வாலில்லா குரங்கு இனம். |
வன்புணர்வு | ஒருவரது சம்மதமின்றி (அவரது விருப்பத்துக்கு மாறாக) வன்முறையைப் பயன்படுத்தி அவருடன் பாலுறவு கொள்ளுதல் |
வல்லுறவு | ஒருவர் இன்னொருவரை அவரது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி பாலுறவிற்கு உட்படுத்தும் செயலாகும். |
வாசிப்பு | பொருள் குறிப்பறிதல், உய்த்தரித்தல் |
விரலணி | விரலில் அணியும் மோதிரம் முதலிய அணி |
வீணை | நரம்பு/கம்பி இசைக்கருவி |
வயிர் | வயிர் என்ற துளைக்கருவி போர்க்களங்களில் பயன்படுத்தப்படடிருக்க வேண்டும். இது விலங்குகளின் கொம்பினால் செய்யப்படும். பதிற்றுப்பத்தில் ‘‘வயங்கு கதிர் வியிராமொடு வலம்புரி ஆர்ப்ப‘‘ (67) என்று கூறப்பட்டிருப்பதைக் காணின் மரங்களின் வைரப் பகுதியைத் துளைத்துச் செய்யப்பட்டிருக்குமோ என்று கருத இடமுளதுஇ அன்றில் பறவையின் ஒலியை போன்று வயிரின் ஒலி அமைந்திருந்ததாகக் குறிஞ்சிப் பாட்டு குறிப்பிடுகிறது. |
விபச்சாரி | விலைமாது, உடலை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யும் பெண் |
விபச்சாரம் | பணம் பெறுவதற்காக செய்யும் பாலியல் தொழில். |
வேசி | விபச்சாரி |
வாழாவெட்டி | கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள். |
விதப்பு | மிகுதி |
வேதாந்தி | வேதாந்தம் பேசுபவர்; வேதாந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர். |
வேதன் | பிரமன் |
வேர் | மண்ணிற்கு கீழுள்ள தாவரத்தின் (நிலைத்திணையின்) பகுதி வேர் எனப்படுகிறது. செடிகொடிகளுக்கு வேண்டிய ஊட்டப்பொருள்களை மண்ணில் இருந்து பெறும் முக்கிய பகுதி |
வெண்மதி | (குணபெயர்) வெண்மை+மதி வெண்மையான நிலவு |
விரிவுரையாளர் | கல்லூரிகளில் பேராசிரியரை விட குறைவான பதவியில் இருக்கும் ஆசிரியர், இங்கிலாந்து நாட்டில் இப்பதவி reader என்றழைக்கப்படும் |
வடக்கன் | வடக்கில் வாழ்பவர்களை அழைக்கும் சொல் |