ய - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
யுவ | இளைய |
யுத்தம் | போர் |
யுவதி | இளம் பெண் |
யாம் | தன்மைப்பன்மைப் பெயர். (தொல்.சொல்.164.) |
யவன் | See யாவன் |
யாவண் | எவ்விடம. இருள் யா வணதோநின் னிழல் வாழ்வோர்க்கே (புறநா. 102). |
யாவது | எது. காரியம் யாவது கழறுவீர் (கந்தபு. தக்கன்மக. 6). |
யாவர் | எவர். யாவர்வாய் திறக்க வல்லார் (கம்பரா. பூக்கொய். 6). |
யாவள் | எவள் யாவளோ வெம் மறையாதீமே (ஐங்குறு. 370). |
யாவை | எவை. |
யாரள் | See யாவள். |
யாவன் | எவன். யாவனோ வொருவ னென்றாள் (கம்பரா. உலாவியர். 11) . |
யோகம் | ஓகம் |
யோகம் | இயமம் |
யோனி | புணர்புழை என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும் |
யௌவனம் | இளமை வனப்பு. |
யோக்கியதாம்சம் | தகுதி. |
யுனானி | கிரேக்க வைத்திய முறை. |
யதேச்சதிகாரம் | சர்வாதிகாரம். |
யானை நெருஞ்சில் | பெரு நெருஞ்சில் |