ம - வரிசை 9 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
முடை நாற்றம்

துர் நாற்றம்.

முட்டி மோது

அலைமோது.

முட்டுக்கட்டை

தடை.

முண்டியடி

நெருக்கிக் கொண்டு செல்.

முதலிரவு

மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்ளும் நாள்.

முதலைக் கண்ணீர்

போலி அன்பு.

முதுகில் குத்துவது

துரோகம் செய்வது.

முதுமக்கள் தாழி

முற்காலத்தில் இறந்தவரை அடக்கம் செய்யப் பயன் படுத்திய மட்பாண்டம்.

முழம் போடு

அளந்து பார்.

முழுக்க முழுக்க

முழுமையாக.

முழுக்குப் போடு

தொடர்பை விட்டுவிடு.

முழுங்குதல்

அபகரித்தல்.

முழு மூச்சாக

ஒரே மூச்சாய் வாசிக்க
சிரத்தையாக

முளையிலே கிள்ளி எறி

ஆரம்பத்திலேயே அழித்து விடு.

முறை வாசல்

பல குடித்தனங்கள் உள்ள வீட்டில் தூய்மை செய்யும் பங்கு முறை.

முன்பின் தெரியாத

பழக்கமில்லாத.

முஸ்தீபு

முன்னேற்பாடு : ஆயத்தம்.

மிஞ்சிப் போனால்

மிக அதிகமான அளவு காணின்.

மினுமினுப்பு

ஒளிர்வு.

மாசு மருவற்ற

சுத்தமான.