ம - வரிசை 8 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மூக்கைத் துளைத்தல் | சுவையான உணவு வகை. |
மூக்கை நுழைத்தல் | பிறர் விவகாரத்தில் தலையிடுதல். |
மூச்சுப் பேச்சு காணோம் | அமைதியாக உள்ள தன்மை. |
மூச்சு விடாதே | எதையும் சொல்லாதே. |
மூடு மந்திரம் | இரகசியம். |
மூட்டை முடிச்சு | பயணத்துக்குரிய பொருள்கள். |
மூட்டி விடு | கலகம் செய். |
மூலவர் | அதிகாரம் கொண்ட பெரிய அதிகாரி. |
மூலை முடுக்கு | எல்லா இடமும். |
மூளியாக | மங்கலத் தோற்றமின்றிக் கை,கழுத்து முதலியவற்றில் அணிகலன் இன்மை குறிப்பது. |
முகத்திரை | மறைவான பொய்ம்மை. |
முகங் கொடுத்துப் பேசு | இன்னுரை செய். |
முகம் செத்துப் போதல் | அவ மதிப்பு காணல். |
முகராசி | நற்பேறு. |
முக வெட்டு | முகப் பொலிவு. |
முக்கி முனகி | சிரமப் பட்டு. |
முடிப்பு | பணம். |
முடியைப் பிய்த்துக் கொள் | மன அலைச்சல் : அவதிப்படு. |
முடிவு கட்டு | தீர்மானம் செய். |
முடுக்கி விடு | துரிதப் படுத்து |