ம - வரிசை 24 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மாயோன் | மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை நிலத்தெய்வமாவான். |
முற்றுவினை | தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் காலம் காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை வினைத்தொகை என்பர். |
மூஞ்சூறு | எலி வகை |
மூட்டை | உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு |
மேல்விசாரணை | கண்காணிப்பு |
மருத்துவமனை | உடல், மன பிணியால் பதிக்கபட்டவர்களை பராமரித்து குணமாக்கும் இடம். |
முக்கியஸ்தன் | முக்கியமானவன் |
மறவு | வீரம் |
மறவர் | ஒரு தமிழ்ச் சாதியினர் |
மறவர் | வீரன் |
மறம் | வீரம் |
மறவன் | வீரன் |
மறவை | வன்கண்மையுடையது |
மௌவை | தாய் |
மௌவல் | காட்டு மல்லிகை பூ |
மோறை | முருட்டுத்தனம் |
மத்துவம் | மத்வர், மத்வாச்சாரியார் |
மகரந்தம் | மலர்த்தாது |
மிட்டாய் | சர்க்கரையை முதன்மை மூலப்பொருளாகக் கொண்ட இனிப்பு வகையாகும் |