ம - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
முனிவர் | துறவர், சார்பில்லோர், நீத்தோர், தவர், முனைவர், மெய்யர், அறவர், மாதவர், கடிந்தோர், அந்தனர், அடிகள், ஐயர் உறுவர், தாபதர், இருடிகள், உயர்ந்தோர், யோகர், அறிஞர், பண்ணவர், அருந்தவர் |
மேலோடி | உலாவி |
மாறி | பண்டமாற்றுவோன் |
முழம் | இரு சாண் கொண்டதான முழங்கை நீள அளவு |
முன்னோர் | முன்பு இருந்தவர்கள்/வந்தவர்கள்; முன்னையவர்; முன்னையோர்; மூதாதையர் |
மூதாதையர் | முன்னோர்கள், மரபினோர் |
முன்கோபி | விரைவில் கோபம் அடைபவன்; முன்கோபம் கொள்பவன் |
மரிப்பு | சாவு |
மரபியல் | மரபியல் அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள், பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும் |
மரியான் | அழிவில்லாதவன் |
மரியாள் | மரியாள் இயேசுவின் தாய் |
மூவேந்தர் | சேரன், சோழன், பாண்டியன் |
முழவு | முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். |
மகுடி | பாம்பாட்டிகள் பயன்படுத்தும் ஒரு மரபுவழி இசைக்கருவி இதுவாகும். இது துளைக்கருவிகள் அல்லது காற்றுக்கருவிகள் வகையைச் சேர்ந்தது. |
மெரசல் | பயம் |
மிரட்டல் | பயமுறுத்தல் |
மயிர்க்குட்டி | சருமத்தில் மயிர்களை கொண்ட ஊர்வன. இவற்றில் நச்சுத் தன்மை கொண்டவையும் உள்ளன. |
மிதவை | தெப்பம், மிதப்பு - வெண்கிடை மிதவையர் (பரிபா. 6,35). |
மெய்யியல் | இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே மெய்யியல் எனப்படும். மெய்யியலானது இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி தொடர்பான பொதுவானதும், அடிப்படையானதுமான பிரச்சனைகள் பற்றிய படிப்பு என வரையறுக்கப்படுகிறது. |
மறைவு | மறைகை; ஒளிதல் |