ம - வரிசை 22 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மாதவிடாய் | பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு |
மாதவிலக்கு | மாதவிடாய் |
மாதசூதகம் | மாதவிடாய் |
மாசங்கம் | பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம் |
மூக்குத்தி | பெண்கள் மூக்கில் அணியும் அணிகலன் |
மெட்டி | தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம். |
முகத்தலளவை | தானியம், திரவம் முதலியவற்றை முகந்தளக்கும் அளவை |
மரக்கால் | முகத்தலளவைக்கருவி வகை; 1/12 கலம்; எட்டுப் படி |
மேல் காற்று | மேற்குத் திக்கில் இருந்து விசும் காற்று |
முகநான்குடையான் | பிரமன் |
மேலாயார் | பெரியோர்கள் |
மணிப்பிரவாளம் | தென்னிந்தியாவில் சமஸ்கிருதமும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும் |
மாத்திரை | தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும், விரலை நொடிப்பதற்கும் உரிய கால அளவு மாத்திரை எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது |
மிடுக்கு | வலிமை |
முன்பள்ளி | சிறுவர் பாடசாலை |
மதிய உணவு | மதிய(12.00 பி.ப - 2:00 பி.ப) வேளை உணவு |
முகிழ் | முகிழ்த்து வரும் நிலை |
மூகை | மணம் முகம் காட்டும் நிலை |
மாழை | இளமை |
மீளுருவாக்கம் | உருவாக்கப்பட்ட ஒன்றை மீண்டும் அதேபோல உருவாக்குதல் |