ம - வரிசை 21 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
முத்தாடை

அணி வகை

மகளிர் கூந்தல்

கொண்டை
குழல்
பனிச்சை
முடி
சுருள்

மலர்வகைகள்

கோடிப்பூ
கோட்டுப்பூ
நீர்ப்பூ
நிலப்பூ

முத்தமிழ்

இயல்
இசை
நாடகம்

முத்தி நிலை

சாலோகம்
சாமீபம்
சாரூபம்
சாயுச்சம்

முத்தீ

ஆகவனீயம்,தட்சிணாக்கினி,காரும பத்தியம்
வயிற்றுத் தீ,காமத் தீ,சினத் தீ

முத்துப் பிறக்குமிடம்

யானை
பன்றி மருப்பு
சிப்பி
பாக்குமரம்
வாழை
நந்து
சங்கு
மீன் தலை
கொக்கு
தாமரை
பெண்ணின் கழுத்து
நெல்
மூங்கில்
கரும்பு
பசுவின் பல்
பாம்பு
மேகம்
இந்து (சந்திரன்)
உடும்பு
முதலை

முப்பழம்

மா
பலா
வாழை

முப்பால்

அறம்
பொருள்
இன்பம்

முரசு

ஓர் ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல் கருவி
தொகைச் சொல் - மண முரசு,வெற்றி முரசு,கொடை முரசு
நியாய முரசு,வீர முரசு,தியாக முரசு

மும்மலம்

ஆணவம்
கன்மம்
மாயை

மும்மதம்

யானையின் கன்ன மதம்
கைம் மதம்
கோசமதம்

மாயை

தமம்
மாயை
மோகம்
அவித்தை
அநிருதம்

மங்கலம்

சாமரம்
நிறைகுடம்
கண்ணாடி
தோட்டி
முரசு
விளக்கு
கொடி
இணைக்கயல்

மண்டலங்கள்

சூரிய மண்டலம்
சந்திர மண்டலம்
வாயு மண்டலம்
வருண மண்டலம்
நட்சத்திர மண்டலம்
அக்கினி மண்டலம்
திரிசங்கு மண்டலம்

மணப் பொருத்தம்

தினப் பொருத்தம்
கணப் பொருத்தம்
மகேந்திரப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
கோனிப் பொருத்தம்
ராசிப் பொருத்தம்
ராசியதிபதி பொருத்தம்
வசியப் பொருத்தம்
ரச்சுப் பொருத்தம்
வேதைப் பொருத்தம்

மலம்

ஆணவம்
கன்மம்
மாயை
மாயேயம்
திரோதானம் (மறைப் பற்றல்)

மு

மூப்பு

மானியம்

இனாம், கொடை, உதவித் தொகை

மறுகா

மறுதடவை அல்லது பிறகு என்பதைக் குறிக்கும் மட்ட்டக்களப்புக் கிராமியப் பேச்சுத்தமிழ். \" ஆடவர் தோளிலும் கா, (இரு பக்கமும் பாரமான பொருட்களைக் கட்டிக்கொண்டு செல்லப் பயன்படும் காவுதடி ) அரிவையர் நாவிலும் கா \" ( மறுகா என்ற சொல் ) என்பது அப்பகுதிக்ளில் உலா வரும் நாட்டுப் பழமொழி.