ம - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மாமூல்

லஞ்சம்.

மாமாங்கம்

12 ஆண்டுகாலம் நெடுங்காலம்.

மாப்பிள்ளை

மணமகன்.

மித்திரன்

நண்பன்
உறவினன்
சூரியனைக் குறிக்கும் கடவுள்
சூரியன்

முரண்டு

பிடிவாதம் : எதிர்த்தல்.

மும்முரம்

தீவிரம் : செயல் துரிதம்.

முகாந்தரம்

அடிப்படை : ஆதாரம்.

மாசி

கும்பம் (30 ) ( 13 feb)

மார்கழி

சிலை ( 29 ) ( 16 Dec)

மார்கர் பேனா

வரைவுத் தூவல்

மைக்ரோ வேவ் அவன்

நுண்ணலை அவியன்

மோப்

துடைப்பம்

மினி செல்

மின்னில்

முன்னிலை

முன்னனி, முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?)
ஒருவர் இருக்கும் இடத்திற்கு முன்னால் -presence ,in front of (இறைவன் முன்னிலையில் யாரும் சமம்)
இலக்கணம் - முன்னே இருப்பவரை நிலைப்படுத்தும் இடம்.அதாவது, பேசுபவரின் முன் இருப்பவர்.
(எடுத்துக்காட்டு) நான், உங்களுக்கு இவ்விலக்கணத்தை விளக்கினேனா?
இதிலுள்ள உங்களுக்கு என்பது , இலக்கணப்படி முன்னிலை இடத்தில் இருக்கிறது.

ம்ம்

அதிருப்தியைக் காட்டுதற்கு அறிகுறியாக வழங்குஞ் சொல்.

மற்றோ

அதிசயவிரக்கங்களைக் குறிக்குஞ் சொல். (யாழ். அக.)

மதைஇய

மதர்த்த. மதைஇய நோக்கு (கலித். 131).
அழகிய. மாதர் வாண்முக மதைஇய நோக்கே (தொல். சொல். 378, உரை).
மடமையான.
வலிய.

மக்பி

இரகசியமான. (C. G.)

மகா

பெருமையான. மகாசபையோம் (S. I. I. iii, 68)
அளவற்ற
உயர்ந்த
மிகுந்த

மறுக்க

திரும்ப. மறுக்க நீ வரக்கூடாது