ம - வரிசை 17 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மூதாதை | முன்பு இருந்தவர்கள் |
முட்டை | முட்டை பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும் |
முலைச்சுரப்பி | பாற்சுரப்பி |
முரண்நகை | முரண்பாட்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை. அதிகமும் விமரிசனத்தன்மை கொண்டது. |
முரண் | எதிர்நிலை |
மழலை | வயதில் மிகவும் சிறிய குழந்தை |
மகள் | ஒருவரின் பெண் குழந்தை |
மகன் | ஒருவரின் ஆண் குழந்தை |
மத்தளம் | ஒரு வகை வாத்தியம் |
மொட்டு | மரம் செடி கொடிகளில் பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை |
மொக்கு | பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு) |
மகுட வாசகம் | திரு வாசகம் |
மேளம் | நாகசுரம் ஒத்து தவல், தாளம் என்பவற்றின் இசைத் தொகுதி |
மந்திரம் | மந்திரக் கலை |
மறவனப்பு | இதிகாசம் |
மீன் | நீரில் வாழும் உயிரினம். (காரணப்பெயர்-மின்னுகின்ற தன்மையால்) |
மாமா | அம்மாவின் சகோதரன் |
முல்லைத் திணை | காடும், காடு சார்ந்த நிலமும் |
மருதம் | வயலும் வயல் சார்ந்த நிலமும் |
மறந்திசின் | மறந்தேன் |