ம - வரிசை 16 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மார்

ஓர் அசை. (தொல். எழுத். 186.)
பல்லோர் படர்க்கைவிகுதியுள் ஒன்று. (தொல். சொல். 209.)
ஒரு வியங்கோள் விகுதி. (நன்.)
ஒரு பன்மை விகுதி. தாய்மார் மோர் விற்கப்போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9).

மாள

ஒரு முன்னிலையசை. (தொல். சொல். 298, உரை.)

மாற்ற

மாற்றுதல்

மான

ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 287.)

மியா

ஒரு முன்னிலை யசைச்சொல். (தொல். சொல். 276.)

மின்

மின்சாரம்

மேன

ஏழாம்வேற்றுமை. யுருபு. (தொல். சொல். 57, சேனா.)

மை

கண்மை
இருள்

முதிர்ச்சி

தகுதி. (சி. போ. பா. பக். 180, சுவாமிநா.)
முதிர்ச்சி
ஆற்றல். (W.)
ஆன்மபரிபாகம்
இருதுவாகை
மன்னிப்பு. (W.)

மிளகுத்தக்காளி

காரற்கத்திரி. (L.)

மலைய

ஓர் உவமவாய்பாடு. (தொல். பொ. 286, உரை.)

மீனநிலயம்

[மீன்களின் இருப்பிடம்] கடல். மூதூர் மீனநிலயத்தினுகவீசி (கம்பரா.பொழிவிறுத்.2)

முக்கோடி

1000000000000000000000

மஹாயுகம்

10000000000000000000000
ஜந்துக்களால்

மணிச்சட்டம்

ஒருவிதமான கணிகருவி, கூட்டல் கழித்தல் போண்ற கணக்கு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் மணிகள் கோர்த்த ஒரு சட்டம்

மீயளவு

உச்சவுயர் நிலை
உயர்சிறப்படை
மீப்பெயரடை

மரபுத்தொடர்

சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ள முடியாததும் முற்றிலும் வேறுபட்ட பொருளில் வழங்கி வருவதுமான தொடர்.

மோட்டார் சைக்கிள்

உந்துருளி

முக்கியஸ்தர்

முன்னிலையாளர்
முதன்மையாளர்

முக்கியம்

முதன்மை
முன்னுரிமை