ம - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
முதுகு | மனித உடலின் பின்புறம் |
மகாமெலம் | கொம்மட்டி. (சங். அக.) |
மரக்காளான் | மரத்தில் முளைக்கும் காளான்வகை |
மிகு | ஓர் உவம வுருபு. (தண்டி. 33.) |
மினுக்கெண்ணெய் | உடலுக்குப் பளபளப்புண்டாக்குந் தைலவகை |
முக்தசர் | சுருக்கமான. முக்தசராய்ச் சொன்னாள் |
முழுத்த | முதிர்ச்சி பெற்ற. முழுத்த வின்பக்கடல் (திருக்கருவை. கலித். அந்.) |
முழுவதும் | முழுமை. முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் (திருவாச. 3, 12) |
முழுவாசி | முழுமை |
மேலெழுந்தவாரி | சிரமமின்மை. மேலெழுந்தவாரியாக இவர்களோடே யுத்தம் பண்ணுகையாலே (ஈடு, 6, 4, 3, ஜீ.). |
மந்தனம் | யானையின் முகபடாம் |
மலையாளர்வளைப்பு | மலையாளிகளைப்போல ஒருவன் பக்கலில் ஒன்றை வாங்க நினைத்தால் வாங்கி யல்லது போகாத்தன்மை. நாழிகை முப்பது சென்றாலும் மலையாளர் வளைப்புப் போலே ஒரடி பேராதாய்த்து (ஈடு, 10, 3, 3). |
மறுபடி | விடை |
மறுவோலை | விடைக்கடிதம் |
மன்னும் | பெரும்பான்மையும் (திருக்கோ.131, உரை) |
மன | மிகவும். அஃதவல மன்று மன (கலித்.108).--part. |
மா | இலக்குமி. மாமறுத்த மலர்மார்பின் (புறநா. 7). |
மாத்திரம் | தனிமை. (சங். அக.) |
மீது | மேற்புரம் |
மீமிசை | மிக்கது. (பிங்) |