ம - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மசமசஎன்று | அசமந்தமாக. |
மட்டம் போடுதல் | வேலை செய்யாதிருத்தல். |
மட்டுப் படு | குறை : வேகம் : தணி. |
மட்டுப் படுத்து | குறைவுப் படுத்து. |
மட்டு மரியாதை | உரிய மரியாதை. |
மடிப்பிச்சை | இரந்து பெறுவது. |
மண்டியிடு | பணிந்து வணங்கு. |
மண்டைக் கர்வம் | மடடைக் கனம் : இறுமாப்பு : செருக்கு. |
மண்டையை உடைத்துக் கொள் | தீவிரமாகச் சிந்தனை செய். |
மண்ணாங்கட்டி | உருப்படாதது. |
மண்ணைக் கவ்வுதல் | தோல்வியடைதல். |
மந்தகாசம் | புன்சிரிப்பு. |
மந்த மாருதம் | தென்றல். |
மந்தை வெளி | மேய்ச்சல் நிலம். |
மப்பும் மந்தாரமாக | மழை வரும் குறிப்பு. |
மயான வைராக்கியம் | தற்காலிக உறுதி. |
மயிரிழையில் | நல்வாய்ப்பின் பேறு. |
மரப்பாச்சி | குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் மரப் பொம்மை. |
மரியாதையாக | அச்சுறுத்தும் குறிப்பு. |
மருத்துவச்சி | அனுபவத்தால் மருத்துவம் செய்யும் மாது. |