ம - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மாட்டல் | காதணி. |
மாந்திரீகம் | மந்திர வித்தை. |
மாமிசப் பட்சிணி | பிற விலங்கின் இறைச்சியை உணவாகக் கொள்ளும் பிராணி. |
மாமியார் வீடு | சிறைச்சாலை. |
மாரடித்தல் | விருப்ப மில்லாத வேலை செய்தல். |
மார்வாடி | வட்டிக்குப் பணம் தருபவன். |
மாறி மாறி | அடுத்தடுத்து. |
மகசூல் | தானிய விளைச்சல். |
மகத்தான | பெரிதான : நிரம்ப. |
மகத்துவம் | பெருமை. |
மகராசி | மகராசன் என்பதன் பெண்பால். |
மகரிஷி | முனிபுங்கவர். |
மகாசந்நிதானம் | சைவ மடத்தின் பீடாதிபதி. |
மகாத்மியம் | மகிமை. |
மகால் | அரண்மனை. |
மகானுபாவன் | ஒருவரை ஏளனக் குறிப்பில் உரைப்பது. |
மகோன்னதம் | உன்னதமானது. |
மக்கர் | இயந்திரம் பழுதடைதல். |
மக்கல் | (பல நாள் வெயிலில் கிடந்து) கெட்டுப் போனது. |
மங்களம் பாடுதல் | நிகழ்ச்சியை முடித்தல். |