ம - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மனம் | ஒருவருடைய எண்ணங்களுக்கு நிலைக்களனாக விளங்குவது, அவருடைய மனம் எனப்படும் |
முதல்வன் | (ஆளவோ அதிகாரம் செலுத்தவோ) உரிமை உள்ளவர் |
முதற்பெயர் | தமிழ் முறைப்படி அப்பாவின் பெயர் |
மண்டபம் | கூடம் |
மரணம் | இறப்பு |
மெஞ்ஞானம் | மெய்யியல் (முன்பே தத்துவம் மெய்யியல் என்று கூறப்பட்டுள்ளது சரியே. இதற்கு மெய்யறிவு பொருந்தும்) |
மருத்துவம் | மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு. |
மமதை | செருக்கு. |
மந்தம் | சோர்வு. |
மந்தணம் | இரகசியம். |
மத்தியஸ்தம் | சமரசம். |
மண்டூகம் | மூடன். |
மசக்கை | கர்ப்பவதி. |
மக்கு | மூடன் |
மகிஷம் | எருமை(க்கடா) |
மகராசன் | செல்வம் மிகுந்த தருமவான். |
மகமை | வியாபாரிகள் தங்கள் வருமானத்திலிருந்து ஒதுக்கிச் சமூகத்தின் பொது வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் நிதி. |
மாஜி | முன்னாள், முந்தின. (C. G.) |
மாவுத்தன் | யானைப்பாகன். |
மாய்மாலம் | பாசாங்கு |