ப - வரிசை 8 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பௌஜ்தாரி | குற்ற விசாரணைக்குரிய. (C. G.) |
பொல்லா | தீமையான. பொல்லாக் கனாக்கண்டார் (சீவக. 2173). |
பேரில் | மீது. அவன்பேரில் குற்றமில்லை. |
பஃது | பத்து. பஃதென்கிளவி யாய்தபக ரங்கெட (தொல். எழுத். 445) |
பஃபத்து | நூறு. (தொல். எழுத். 482, உரை.) |
பிளித் நாணல் கதிர்குருவி | blyth's reed warbler |
பக்குவம் | முதிர்ச்சி |
பகிஷ்கரிப்பு | புறக்கணிப்பு |
பந்துக்கள் | உறவினர் |
பதிஞானம் | இறையுணர்வு |
பரம்பரை | தலைமுறை |
பவுர்ணமி | முழுமதி |
பச்சாத்தாபம் | இரக்கம் |
பட்சணம் | சிற்றுண்டி, |
பரஸ்பரம் | ஒருவர்க்கொருவர் |
பராக்கிரமம் | பேராண்மை |
பரிகாசம் | ஏளனம், நையாண்டி |
பரிகாரம் | விடிவு |
பரிச்சயம் | பழக்கம்,அறிமுகம் |
பரிசீலனை | ஆய்வு |