ப - வரிசை 7 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பழைய | நாட்பட்ட பழைய வடியார்க்கு (திருவாச, 5, 89) . |
புத்தம்புதிய | மிகப்புதிய. |
பென்னம்பெரிய | மிகப்பெரிய |
பென்னம்பெருத்த | See பென்னம்பெரிய. |
படா | பெரிய |
படே | பெரிய |
பராபர் | சரியான. அவன் பராபர் ஆள். (C. G.) |
பரிய | பருத்த. பரிய மாசுணங் கயிறா (தேவா.1138, 6) |
பலான | இன்னதென்றறியப்பட்ட |
பாப்புவார் | See பாபுவார். (R. F.) |
புத்தப்புதிய | See புத்தம் புதிய. |
புதிய | நூதன. |
புது | see புதிய. |
புறவெட்டு | பிரத்தியேகமான. புறவெட்டு வக்கீல். |
பெயரிய | பெயர்பெற்ற. இருபாற் பெயரிய. மூதூர் (புறநா. 202). |
பெரிய | பெரிதான. பெரிய மேருவரையே சிலையா மலைவுற்றார் (தேவா.1114, 9). |
பொல்லாத | See பொல்லா. பொல்லாத சமணரொடு (தேவா. 412, 10). |
பொற்ற | பொன்னாலாகிய. பொற்ற மாளிகை (விநாயகபு. 75, 126). |
போதிய | போதுமான. போதிய அளவு. |
போந்த | தகுந்த. பாந்த மனிதன் |