ப - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பலனுள் | ஒன்று பெயர்ச்சொற்குறி |
பஞ்சம்ஹிஸ்ஸா | ஐந்திலொருபகுதி |
பல் | See பல |
பல்லவர் | பலர். பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல் (பு. வெ.10, காஞ்சிப். 6, கொளு). |
பல்லார் | பலர். பல்லா ரகத்து (குறள், 194). |
பல | ஒன்றுக்கு மேற்பட்டவை. பலவற் றிறுதி யுருபிய னிலையும் (தொல் எழுத்.220) |
பலபல | அனேகமானவை. (தொல்.எழுத்.215, உரை.) |
பலர் | அனேகர். பலரறி சொல்லே (தொல்.சொல்.7). |
பொதுக்கோ | சடக்கென புள்ளிதுவென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட (திவ். பெரியாழ். 2, 5, 4). |
பப்ப | இகழ்ச்சிக்குறிப்பு பப்பவப்பர்(திவ்.பெரிய தி.1, 3, 7). |
பளபளா | இன்மைக்குறிப்பு. |
பளா | See பளாபளா. |
பளாபளா | அதிசயக்குறிப்பு. பளாபளாவதிக வெகுமானமாகும் (திருவேங்.சத.29). |
பகிர் | வெளிப்புறம். பகிர்ப்படக் குடரைக் கொய்யும் (கம்பரா. இரணிய. 138.) |
பகு | அதிகமான பகுவொளிப் பவழஞ்் செவ்வாய் (சீவக. 2801). |
பூகா | பசித்த. பூகாப்பக்கிரி. (C. G.) |
பூங்கு | பல (நாமதீப. 772.) |
பேகூப் | முடமான. (C. G.) |
பேபராக்கு | See பேபர்வா |
புக்கா | பசியுள்ள. (C. G.) |