ப - வரிசை 36 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பிரா | கச்சு |
பத்தி | வரிசை |
பிரிவு | பிரிதல், ஒற்றுமையின்மை, விட்டு செல்லுதல் |
பாசி | நீர்ப்பாசி, கடற் பாசி |
பட்டியல் | விபரங்களை ஏதேனும் ஓர் அடிப்படையில் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தரும் வரிசை முறை |
பாதுகாப்பு | காப்பு |
பண்டுவம் | நோயினை குணமாக்க எடுக்கப்படும். மாற்று முறை |
பாலியல் | உடலுறவு தொடர்புடையன |
புள்ளோப்புதல் | சங்க காலத்தில் பெண்களின் பணிகளில் புள்ளோப்புதல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. புள்ளோப்புதல் என்றால் பறவைகளை விரட்டுதல் ஆகும். |
பண்டை | பழமையான |
படிப்பு | அறிவை பெருக்கும் செயற்பாடு அனைத்தும் படிப்பாகும். |
போதனை | அறிவு சார்ந்த வழிகாட்டல் |
பாண்டை | துர்நாற்றம், நாற்றம் |
பாண்டைநாறி | கெட்ட நாற்றம் வீசுகின்ற பெண் |
பாண்டன் | கெட்ட நாற்றம் வீசுகின்ற ஆண் |
பாண்டல் | பாசி/பூசணம் பிடித்து நாறுதல்; |
பழைமை | பழமை |
பம்பை | பம்பை தமிழர்களின் ஒரு இசைக்கருவி |
பாண்டில் | வட்டம் |
புல்லாங்குழல் | புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி வகையைச் சேர்ந்தது |