ப - வரிசை 35 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பறைஞ்சன் | சொன்னேன் |
பறைஞ்சவன் | சொன்னவன் (சொன்னான்) |
பறையாதே | சொல்லாதே , பேசாதே |
பறையிறான் | சொல்கிறான் |
பதிவொளி | காணொளி |
புலால் | இறைச்சி |
பூப்பு | பூக்கை |
புணர்ச்சி | சேர்தல், இணைதல் |
பாலுறவு | பால் ரீதியான புணர்வு/உறவு எனப்படும். |
பரிதி | சூரியனின் பெயர்களில் ஒன்று. ஆதவன், செங்கதிர். பகலவன், வெய்யோன், ரவி, ஆதவன் எனவும் பரிதியை அழைப்பர். |
பல்லூடகம் | பல் + ஊடகம் |
பேரகரமுதலி | அகரமுதலிகளுக்கு எல்லாம் அடிப்படையாய் அமையும் மிகப்பெரிய அகரமுதலி |
பருமன் | உடலின் அகலம் |
பரப்பளவு | பரப்பப்பட்ட அளவு |
பதக்கு | இரண்டு குறுணி கொண்டதோர் அளவு; இரண்டு மரக்கால் |
பேதுறார் | மயக்கமடையாதவராய் |
பங்கம் | குற்றம் |
பரிவு | இரக்கம் |
பாடசாலை | பள்ளிக்கூடம் |
பெரும்பொழுது | ஆறு பருவங்கள் (ஒரு வருடத்தின் பெரும்பொழுது). |