ப - வரிசை 34 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பஞ்ச கோசம்

ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள்

பஞ்ச கோசம்

அன்னமய கோசம்
ஆனந்த மய கோசம்
பிராணயமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்

பஞ்ச சயனம்

இலவம் பஞ்சு
பூ
கோரை
மயிர்
அன்னத்தூவி

பஞ்ச பட்சி

குறியறிதற்கு உரியனவும் : அ,இ,உ,எ,ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான

பஞ்ச பட்சி

வல்லூறு
மயில்
ஆந்தை
காகம்
கோழி

பஞ்ச பல்லவம்

பூசைக்குரிய ஐந்து தளிர்கள்

பஞ்ச பல்லவம்

ஆத்தி
மா
முட்கிளுவை
முல்லை
வில்வம்

பாவகை

வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

பாவினம்

தாழிசை
துறை
விருத்தம்

பூசைக்குரிய மலர்கள்

புன்னை
வெள்ளெருக்கு
சண்பகம்
நந்தியாவட்டம்
குவளை (நீலோற்பலம்)
பாதிரி
அலரி
செந்தாமரை

புண்ணியச் செயல்

எதிர் கொண்டு அழைத்தல்
பணிதல்
உட்காரச்செய்தல்
கால்கழுவல்
அருச்சித்தல்
நறும்புகை காட்டல்
விளக்குக் காட்டல்
அறுசுவையுணவு படைத்தல்
புகழ்தல்

பிரம புராணங்கள்

பிரம புராணம்
பதும புராணம்

பேறுகள்

புகழ்
கல்வி
வலிமை
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல்
நல்லூழ்
நுகர்ச்சி
அறிவு
அழகு
பெருமை
இளமை
துணிவு
நோயின்மை
நீடாயுள்

பெண்டிதர் பருவம்

பேதை 5-7 வயது
பெதும்பை 8-11 வயது
மங்கை 12-13 வயது
மடந்தை 14 - 19 வயது
அரிவை 20 - 25 வயது
தெரிவை 26 _ 31 வயது
பேரிளம் பெண் 32 _ 40 வயது

பெண்டிதர் வகை

பதுமினி
சித்தினி
சங்கினி
அத்தினி

பெண்பாற் பிள்ளைப் பருவம்

காப்பு
செங்கீரை
தாலப்பருவம்
சப்பாணி
முத்தம்
வாரானை
அம்புலி
கழங்கு
அம்மானை
ஊஞ்சல்

போர்க்குரிய மாலைகள்

வெட்சி
கரந்தை
வஞ்சி
காஞ்சி
நொச்சி
உழிஞை
தும்பை
வாகை

பா

பாட்டு
நிழல்
அழகு

பயிற்றகம்

பாடசாலை கற்று மேலும் (அ) மேலதிகமாக கற்கும் இடம்

பறைதல்

சொல்லுதல்