பொற்ப | பொலிவுபெற. திருமணி... சென்னிப் பொற்ப (திருமுரு. 85) ஓர் உவமச்சொல். மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம் (தொல். பொ. 286, உரை). |
போ | செல்லுதல். மாமலர் கொய்ய . . . யானும் போவல் (மணி. 3, 83). அடைதல். (W.) உரியதாதல். (W.) பிறத்தல். வணிகர் மரபிற் போந்தோன் (உபதேசகா. சிவபுண். 153). நீண்டு செல்லுதல். தென் கரைக்கு நடுவாகப்போயின இடைகழி (T. A. S. i, 189). தகுதியாதல். அப்படிச் செய்யப்போகாது. (W.) நெடுமையாதல். (தொல். சொல். 317.) போகித ழுண்கண். (பு. வெ. 11, ஆண்பாற். 3). நேர்மையாதல். வார்தல் போகல் . . . நேர்பு நெடுமையும் செய்யும்பொருள் (தொல். சொல். 317). பரத்தல். விசும்பினு ஞாலத் தகத்தும் வளியே யெதிர்போம் பல்கதிர் ஞாயிற்றொளி (கலித். 144, 40).10. நிரம்புதல். நலந் துறை போய நங்கை (சீவக. 2132).1 மேற்படுதல். ஆயிரமல்ல போன (கம்பரா. மாயாசனக. 14) ஓங்குதல். கள்ளிபோகிய களரியம் பறந்தலை (புறநா. 237) நன்கு பயிலுதல். முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வுத்தமக்கவி (கம்பரா. சிறப்புப். 9) கூடியதாதல். மூச்சு விடப் போகவில்லை பிரிதல். புலம்பப் போகாது (பரிபா. 11, 118) ஒழிதல். மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10) நீங்குதல். நூல் போன சங்கிலி (பதினொ. திருத். திருவந். 69) கழிதல். போய காலங்கள் (திவ். திருவாய். 2, 6, 10).1 To vanish, disappear மறைதல். ஒளியவன் . . . தேரும் போயிற்று (திவ். பெரியதி. 8, 6, 6) காணாமற் போதல். போன பொருள் திரும்பாது மாறுதல் கழிக்கப்படுதல். ஆறிலே இரண்டு போக வகுக்கப்படு்தல். நூறில் பன்னிரண்டு எட்டுத்தரம் போகும்.2 சாதல். தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் (தேவா. 692, 2) முடிவாதல். இன்பமாவதே போந்த நெறி என்றிருந்தேன் (தாயு. சின்மயானந்த. 5) ஒலியடங்குதல். முரசெலாம் போன (கம்பரா. முதற்போ. 237) புணர்தல். அவளோடு போனான் தொடங்குவதைக் குறிக்கும் துணைவினை. அதைச் செய்யப்போகிறான் பகுதிப்பொருளையே வற்புறுத்தும் துணைவினை. தூங்கிப் போனான் |
போற்றி | புகழ்மொழி கோயிற் பூசை செய்யும் மலையாளநாட்டுப் பிராமணன் போத்தி துதிச்சொல்வகை. பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி (சிலப். 13, 92). |
பறவை | பறக்கும் தன்மை உடைய உயிரினங்களை பறவை எனலாம் |
பார்க்க | உறழ்ச்சிப் பொருளில் வரும் சொல். அவைகளிலும் பார்க்கப் பிரீதியிகும்படி (கோயிற்பு. திருவிழா. 22, உரை). |
பார்க்கிலும் | பார்க்க. (Colloq.) |
பொதிரெறி | நடுங்குதல். கண்ணோர் பொதிரெறிய வார்த்தான் (கம்பரா. அதிகா. 30). |
பொன்னாசி | இரத்தம் வடியும் மூக்கு. |
பைகி | அளவுக்கு. பத்துக்காணி பைகி ஒன்பது சாகுபடி. (Sm.) |
போம் | ஓர்அசைச்சொல். (சது.) |
போலும் | ஒரு அசைச்சொல். (நன்.441.) |
பட்சத்தில் | ஆயின். அவன் வரும் பட்சத்தில் நான் போவேன் |
பட | ஒரு உவமவுருபு. மலைபட வரிந்து (சிவக. 56). |
பான் | ஒரு வினையெச்சவிகுதி (நன். 343.) |
பி | பிறவினை. விகுதி. (வீரசோ. தாதுப். 6.) |
பு | தொழிற்பெயர் விகுதி பண்புப்பெயர் விகுதி இறந்தகால வினையெச்ச விகுதி |
பொருவ | ஒரு உவமைச் சொல். (தொல். பொ. 289.) |
போதந்து | ஒரு சொல் விழுக்காடு. அது விலக்குப் பட்டது: ஈண்டுப்போதந்து (தொல். சொல். 422, இளம்பூ.) |
போயிற்று | ஒரு அசைநிலை. (தொல். சொல். 425.) |
போல் | ஓர் உவமவுருபு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து (குறள், 118) ஓர் அசைச்சொல். (திருக்கோ. 222.) |