ப - வரிசை 25 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பரிதிவட்டம் | சூரியமண்டலம். வெங்கதிர்ப் பரிதிவட்டத்தூடுபோய் விளங்குவாரே (திவ்.பெரியதி, 4, 5, 10). |
பலாந்தம் | ஒருகாற்காய்த்துப்பட்டுப்போம் பூண்டு (யாழ்.அக.) |
பின்மாலை | வைகறை. பின்மாலையே திருவிளக்கேற்றி வைத்துத் தயிர் கடைவார்கள் (ஈடு 1, 3,1, ஜீ.) |
பழமை | தொன்மை |
பூர்வம் | ஆதி |
பூருவம் | பழமை. பூருவ வயிரநாடிப்போர் விளைத்து (சேதுபு. கத்து. 37). |
பெரும்பாடு | பேருழைப்பு |
பெரும்பான்மை | புகழுரை. தலைமகளைப் பெரும்பான்மை கூறி (திருக்கோ. 164, உரை) |
பசிந்தி | வெண்ணிறமுள்ளதும் 15-ஆங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை. |
படி | அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு |
படி | கற்க |
பிடித்து | கைப்பிடிப்பொருள். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037) |
பின்னடி | பிற்பட்டது |
பின்னை | பின்னைப் புதுமைக்கும் (திருவாச. 7, 9) |
புறன் | பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ. அவையடக். 9) |
பூதராயன் | பிசாசம். (யாழ். அக.) |
பூரி | மிக்க. நங்குடி கோத்திரப்பெயர் பூரிச்சிரேட்டம் (பிரபோத. 11, 91). -n. |
பூரா | முழுதுமான |
பெய்துரை | இடைப்பெய்து உரைப்பது |
பெரிது | பெரியது. நன்மை கடலிற் பெரிது (குறள்,103) |