ப - வரிசை 22 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
படியளத்தல்

சோற்றுக்கு வழி செய்தல்.

படுத்து விட்டது

தொழில் மந்தம் ஆதல்.

படைப்பாளி

உருவாக்குனர்
ஒரு பொருளை உருவாக்கும் திறமை படைத்தவர்

பட்சபாதம்

வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கருத்து.

பட்டணப் பிரவேசம்

மடாதிபதி,குரு பூசை முடிந்ததும் நகரை வலம் வருதல்.

பட்டர்

திருமால் கோயிலில் பூசை செய்பவர்.

பட்டாதாரர்

நிலவுரிமையாளர்.

பட்டாபிஷேகம்

முடிசூட்டு விழா.

பட்டாமணியம்

கிராம அதிகாரி.

பட்டிக்காடு

வசதியற்ற சிறு கிராமம்.

பட்டி தொட்டி

சிறு கிராமமும் அதனையொட்டிய பகுதியும்.

பட்டும் படாமலும்

முழுமையாக ஈடுபடாத.

பட்டு வாடா

விநியோகம்.

பட்டை சாதம்

நைவேத்தியமாகப் படைக்கப்பட்டுப் பின்னர் வழங்கப்படும் சோறு.

பட்டை நாமம்

ஏமாற்றும் தன்மை.

பதம் பார்த்தல்

சோதித்துப் பார்த்தல்.

பதிலடி

எதிர் நடவடிக்கை.

பதுக்கல்

சட்ட விரோதமாக மறைத்து வைத்தல்.

பறை

தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்க்பட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன.
மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும் காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர் கூறி சங்க இலக்கியத்தில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.

பெரும்புளகி

அரளி