ப - வரிசை 21 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பகல் கொள்ளை

அநியாயமாக விலையேற்றி விற்பனை செய்தல்.

பகாளாபாத்

தயிர் கலந்த உணவு வகை.

பகிஷ்கரி

புறக்கணித்தல் : ஒதுக்குதல்.

பகீர் எனல்

மனத்துள் அச்சம் படர்தல்.

பகீரதப் பிரயத்தனம்

கடும் முயற்சி.

பக்க பலம்

வலுவான ஆதரவு : பெருந்துணை.

பக்கவாத்தியம்

துணையாக வரும் இசைக் கருவிகள் : ஒருவன் கோள் சொல்ல உடன் இருப்பவர்கள் அதையொட்டிப் பேசுதல்.

பங்காளிக் காய்ச்சல்

போட்டியும் பொறாமையும்.

பச்சாதாபம்

இரக்கம் , பரிவு.

பச்சையாக

வெளிப்படையாக.

பச்சைக் கொடி

அனுமதி.

பஞ்சப் பாட்டு

இல்லாமையைப் பற்றிப் புலம்புதல் : வசதி குறைவு குறித்து வருந்துதல்.

பஞ்சப்படி

அகவிலைப்படி.

படபடப்பு

மனக்கிலேசம் : சஞ்சலம்.

படம் காட்டு

பெரிது படுத்திக் கூறு.

படம் பிடித்துக் காட்டு

உண்மையைத் தெளிவாகக் கூறு.

படவா

வகைச்சொல் : அன்புடன் அழைக்கும் கொச்சை மொழி.

படாடோபம்

ஆடம்பரம் : பகட்டு.

படிப்படியாக

சிறிது சிறிதாக.

படிப்பினை

உலக அனுபவ ஞானம்.