ப - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பூமி | புவி |
பந்தம் | பிணைப்பு |
பிராணி | விலங்கு |
பகவான் | கடவுள் |
பிரார்த்தனை | கூட்டு வழிபாடு |
பிரியம் | பாசம்; அன்பு |
பிரதானம் | முதன்மை |
பிரவேசம் | நுழைவு |
பிரசுரம் | பதிப்பு |
பௌதீகம் | இயல்பியல் |
புத்தகம் | நூல் |
பதார்த்தம் | சமைத்த காய்கறிகள். |
பட்டி | திருட்டு ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் கூடம் : வெற்றிலைப் பாக்கு கட்டி வைக்கப்பட்ட சுருள். |
பட்சி | பறவை. |
பசை | பண வசதி |
பக்கிரி | பரதேசி : வறியவன். |
பக்கா | சரியான |
பகிஷ்காரம் | புறக்கணிப்பு. |
பகிரங்கம் | வெளிப்படை. |
பாஷாணம் | நஞ்சு |