ப - வரிசை 19 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பித்தான்

சட்டையின் இறுக்கத்திற்குத் துளையிட்டு இணைக்கப்படும் கருவி.

பித்துக்குளி

பைத்தியம்.

பிரத்தியட்சம்

நன்கு தெரிவது.

பிரத்தியோகம்

சிறப்புடைய.

பிரதட்சிணம்

வலம் வருதல்.

பிரதானி

அமைச்சன்.

பிரதி கூலம்

தீமை.

பிரமகத்தி

விடாது தொடரும் கொலைப் பாவம்.

பிரம பிரயத்தனம்

கடும் முயற்சி.

பிரமரகசியம்

பரம ரகசியம்.

பிரம வித்தை

அறிய செயல்.

பிரஸ்தாபம்

செய்தி.

பிராப்தம்

பேறு.

பிராயச் சித்தம்

பரிகாரம்.

பிரியா விடை

பிரிவதற்காக வருந்தி விடை கொடுத்தனுப்புதல்.

பிலுபிலுவென்று

மாற்றார் சண்டையிட்டுத் துன்புறுத்துதல்.

பிள்ளை குட்டி

குழந்தைகள்.

பிள்ளையாண்டான்

இளைஞன்.

பிள்ளையார் எறும்பு

கறுப்பு நிறமுடைய கடிக்காத எறும்பு வகை.

பிள்ளையார் சுழி

"உ" என்னும் எழுத்து.