ப - வரிசை 17 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பூகோளம்

புவியியல்.

பூசி மெழுகு

குற்றமாயினும் வெளிப்படுத்தாது மறைத்து விடு.

பூச்சாண்டி காட்டுதல்

அச்சுறுத்தும் நோக்கத்தில் விரட்டுதல்.

பூச்சிக் காட்டு

குழந்தைகளுக்குக் அச்சம் உண்டாக்குமாறு செய்.

பூதாகரம்

மிகப் பெரிய வடிவம்.

பூம்பூம் மாடு

அலங்காரம் செய்து பெருமாள் மாட்டுக் காரன் அழைத்து வரும் மாடு.

பூர்வாங்கம்

முதல் நிலை.

பூர்வாசிரமம்

துறவியின் கடந்த வாழ்க்கையின் பகுதி.

பூஜ்யம்

ஒன்றுமில்லை எனப்படுவது.
பூச்சியம்
சுழியம்

பூஜை புனஸ்காரம்

வழிபாட்டு நியமம்.

பூஜை போடுதல்

யாருக்கும் கொடுக்காது பாதுகாக்கும் தன்மை.

புகுந்து விளையாடுதல்

நன்கு எளிதாகச் செயற்படுதல்.

புசுபுசு என்று

மிகவும் மிருதுத் தன்மையுடையது.

புடம் போட்டது

தூய்மையுடையது.

புடைசூழ

பலர் பின் தொடர்தல்.

புட்டிப்பால்

தாய்ப் பாலுக்குப் பதிலாக தரும் குழந்தை உணவு.

புத்தகப் புழு

புத்தகம் படிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவன்.

புத்திர பாக்கியம்

குழந்தைப் பேறு.

புரட்டன்

உண்மையில்லாதவன்: பொய்யன்.

புரவியாட்டம்

பொய்க் கால் குதிரை ஆடுதல்.