ப - வரிசை 16 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பெட்டி போடு

துணிகளை மடிப்பு செய்யப் பயன்னடுத்தும் நெருப்புப் பெட்டி.

பெட்டி வண்டி

கூண்டுள்ள வண்டி.

பெண்சாதி

மனைவி.

பெண் வீட்டார்

திருமணப் பெண்ணுடைய பெற்றோர் முதலானோர்.

பெயரளவில்

வெறும் தோற்றம்.

பெயரெடு

புகழ் பெறு.

பெயர் பெற்ற

புகழுடைய.

பெரிது படுத்து

முக்கியத்துவம் கொடு.

பெரிய ஆள்

வல்லோன் : அறிவுடையோன்.

பெரிய புள்ளி

செல்வாக்குடையவர்.

பெரிய மனம்

தாராள மனம் : இரக்க சுபாவம்.

பெரியவர்

வயதில் முதிர்ந்தவர்.

பெருந்தகை

பெருமையுடையவர் : சான்றோர்.

பெருந் தன்மை

தாராள மனப்பாங்கு.

பெருநோய்

தொழு நோய் : குட்டம்.

பெரும் பாலும்

பல : அனேகமாக.

பெரும் போக்கு

பெருந் தன்மை.

பெருமக்கள்

சான்றோர்.

பெருமாள் மாடு

பூம் பூம் மாடு.

பெருவிரல்

கட்டை விரல்.