ப - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பாஷை | மொழி |
பூர்வ | முன்; (பூர்வஜென்மம் = முற்பிறப்பு) |
பிரயோஜனம் | பயன் |
பிரத்யேக | சிறப்பான; தனித்துவமான |
பிள்ளையார் | யானைமுகத்தையுடைய கடவுள் |
பௌத்திரன் | மக்கள் வழிப் பேரன். |
பௌத்திரி | மக்கள் வழிப் பேர்த்தி. |
போகப் போக | நாளடைவில். |
போக்குக் காட்டு | பாவனை செய். |
போட்டா போட்டி | பலத்த போட்டி. |
போதாக் குறைக்கு | கூடுதலாக. |
போயும் போயும் | பயனற்றதாக. |
போஜனம் | சாப்பாடு. |
போஷகர் | பாதுகாவலர். |
போஷனை | பராமரிப்பு. |
போஷாக்கு | சத்துப் பொருள். |
பொக்கை வாய் | பல் இல்லாத வாய். |
பொசுக்கு | கருகச் செய். |
பொடிசு | சிறியது. |
பொடியன் | சிறுவன். |